search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை-கோதையாறு வழித்தடத்தில் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பஸ்கள் இயங்கின
    X

    பேச்சிப்பாறை-கோதையாறு வழித்தடத்தில் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பஸ்கள் இயங்கின

    • சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
    • பள்ளி மாணவர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள், மின் நிலைய ஊழியர்கள் உள்பட பலர் கடும் அவதி

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பேச்சிப்பாறை சீரோபாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலை முழுமையாக சேதமடைந்து உள்ளது. எனவே இந்த தடத்தில் பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறி திருவட்டார் பணிமனை டிரைவர்கள் பஸ்களை பணிமனைக்கு திருப்பி விட்டனர். இதையடுத்து பள்ளி மாணவர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள், மின் நிலைய ஊழியர்கள் உள்பட பலர் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இந்நிலையில் பணிமனை நிர்வாகம், டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனைத்தொடர்ந்து மாலையில் பள்ளி மாணவர்கள் வீடு திரும்பும் வகையில் ஒரு டிரிப் இயக்கப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்று பஸ் டிரைவர்கள் கூறினர்.

    இதுதொடர்பாக சப்-கலெக்டர் கவுசிக், போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர்கள் பஸ்களை இயக்க ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    இருப்பினும் தற்போது தினமும் அந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகள் மீண்டும் சேதமடையும் நிலை உள்ளது. இதனால் சரியான முறையில் பஸ்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட்டு சரி செய்துதர வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×