என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் மீன்பிடித்துறைமுகம் விரிவாக்கம் குறித்து கலெக்டர் ஆலோசனை
- 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கு தங்கு தளமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன
- ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு ஆய்வு பணியும் மேற் கொள்ளப்பட்டது
கன்னியாகுமரி :
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2008-ல் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது குளச்சல் மீன்பிடித்துறைமுக திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி துறைமுக பணியை தொடங்கி வைத்தார்.
தற்போது குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இங்கு தங்கு தளமாக கொண்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. தவிர இயற்கை சீற்ற காலங்களில் அருகில் உள்ள மீனவர் கிராங்களில் உள்ள விசைப்படகுகளும் இங்கு வந்து தொழில் செய்து வருகிறது. இங்கு விசைப்படகுகளை நிறுத்துவதற்கு போதிய வசதியில்லாமல் இருந்து வருகிறது. எனவே குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இத்துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் என சட்டமன்ற கூட்டத் தில் முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு ஆய்வு பணியும் மேற் கொள்ளப்பட்டது.இந்நிலை யில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று குளச்சல் மீன்பிடித்துறைமுக பகுதி களை பார்வையிட்டு துறைமுக விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற் கொண்டார். பின்னர் விரிவாக்க சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி னார்.
இதில் மீன்பிடித்துறைமுக இணை இயக்குனர் காசி நாத பாண்டியன், உதவி பொறியாளர் அரவிந்த் குமார், இளநிலை பொறி யாளர் ஆஷிக், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஸ்டீபன், குளச்சல் மீன்பி டித்துறைமுக உதவி இயக்குனர் விர்ஜின் கிறாஸ், ஆய்வாளர் லிபின் மேரி, குளச்சல் நகராட்சி பொறியாளர் ஜீவா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் மீனவர்கள் பாழ டைந்து காணப்படும் அரசு தும்பு ஆலை வளாகத்தில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க அங்கு மணல் போட்டு சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.