search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    • 6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடம்
    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது காதாரத்துறையின் கீழ் உள்ள விளவங்கோடு தாலுகாவிற்குட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல மகப்பேறு மருத்துவம், கண் சிகிச்சை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், தொழுநோய் பிரிவு, காசநோய் பிரிவு, முதியோர் பிரிவு, குடும்ப கட்டுப்பாடு, ஆரோக்கியமான இளம்பருவகால ஆலோசனை, மாரடைப்பு, பக்கவாதம், மகப்பேறு, தீக்காயம், நாய்க்கடி, பாம்புக்கடி, தேள் கடி, விஷம் அருந்துதல், தொடுதல், சுவாசித்தல், வலிப்பு நோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.6.3 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட கூடுதல் மருத்துவ கட்டிடத்தினை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டதோடு, உள்நோயாளிகளாக சிசிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் வெளியில் உட்காரும் விதமாக தற்காலிக கூடாரம் அமைத்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர், இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை பணியாளர் வருகை பதிவேடு, பணி பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) டாக்டர் மீனாட்சி, உதவி செயற்பொறியாளர், பேரூராட்சி தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×