search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பதிசாரம் விதைப்பண்ணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
    X

    திருப்பதிசாரம் விதைப்பண்ணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

    • தரமாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க அறிவுரை
    • பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட வேளாண்மை, பொதுப் பணித்துறை, மீன்வ ளத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய் தார்.

    அதன் ஒரு கட்டமாக திருப்பதிசாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில அரசு விதைப்பண்ணையில் முதல் பருவத்தில் பயிரி டப்பட்ட அம்பை-16, டி.பி.எஸ்.5, கருங்குறுவை அறு வடை பணிகளையும் பார்வையிட்டார். தக்கை பூண்டு பயிரிடப்பட்ட பகுதிகளையும், 2-ம் பருவத்திற்கு தயார் நிலை யில் உள்ள நாற்றாங்காலை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் விதை சுத்தி கரிப்பு நிலையம், மாநில அரசு விதைப்பண்ணையில் சேகரித்து வைக்கப் பட்டுள்ள நெல் விதைகளை பார்வையிட்டதோடு, அவற்றை பாதுகாப்பாக வைத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தரமான விதைகள், நாற்று கள் மற்றும் இடுபொருட்க ளை உற்பத்தி செய்து விவ சாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

    மாவட்டத்தின் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்மை தொழில் நுட்பங்களில் உறைவிடம் மற்றும் அறிவு மையமாக செயல்பட வேண்டும் என்றும், விவசாய முகாம்க ளி லும், வட்டார அளவிலும் விவசாயிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து கன்னியாகுமரி சென்ற கலெக்டர் ஸ்ரீதர், அங்கு சுற்றுலாத்துறையின் சார்பில் கதிரியக்க தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு அய்யன் திருவள்ளுவர் சிலையில் செயல்படுத்தப்பட உள்ள பணிகள் குறித்து கேட்ட றிந்ததோடு, பணிகளை விரைந்து மேற்கொண்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    கன்னியாகுமரி படகு துறையில் கூடுதல் படகு நிறுத்தும் தளம் அமைக்கும் பணிகளையும் கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், 80 மீட்டர் நீளத்திற்கு கூடுதலாக படகு அணையும் தளம் அமைப்பதற்கு தேவையான கான்கிரீட் பிளாக்குகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பணித்த ளத்தில் இவற்றை அமைக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் படகு தளம் அமைக்கும் பணி தற்போது 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்றும் கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

    Next Story
    ×