என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் குற்றத் தடுப்பு ஆலோசனை கூட்டம்
- 2 துணை சூப்பிரண்டுகள் பங்கேற்பு
- 2 மாநில போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
நாகர்கோவில் :
தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதாக 2 மாநில போலீசாருக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
குற்ற நிகழ்வுகள், கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு விட்டு கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கும், இங்குள்ள வர்கள் கேரளாவுக்கும் தப்பிச் சென்று விடுவதாக கூறப்படுகிறது.
இதனை தடுப்பதற்காக கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் 2 மாநில போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெய்யாற்றங்கரை போலீஸ் உதவி சூப்பிரண்டு பாரேஷ், துணை சூப்பிரண்டு கள் தங்க ராமன் (குளச்சல்), உதயசூர்யன் (தக்கலை) ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
போதைப் பொருள், கனிம வளங்கள் கடத்துவது, தமிழ்நாட்டில் குற்றங்கள் செய்து விட்டு கேரளாவில் பதுங்கி இருப்பது, கேரளா வில் குற்றம் செய்து விட்டு தமிழ்நாட்டில் வந்த பதுங்கி இருப்பது போன்ற இரு மாநில எல்லையில் நடைபெறும் குற்ற செயல்களை தடுப்பது போன்றவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கொல்லங்கோடு போலீசார் செய்திருந்தனர்.