search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே பதுக்கல் மண்எண்ணை பறிமுதல் செய்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் - வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு
    X

    புதுக்கடை அருகே பதுக்கல் மண்எண்ணை பறிமுதல் செய்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் - வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    • புதுக்கடை சுற்றுவட்டார பகுதி கடற்கரை கிராமங்களில் இருந்து சாலை வழியாகவும், கடல் வழியாகவும் அதிக அளவில் கடத்தப்படுவதாக புகார்
    • 34 கேன்களில் 1,200 லிட்டர் மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மீன்பிடி படகுகளுக்கு அரசு மானிய விலையில் மண்எண்ணை வழங்கி வருகிறது.

    இந்த மானிய விலை மண்எண்ணை அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. குறிப்பாக புதுக்கடை சுற்றுவட்டார பகுதி கடற்கரை கிராமங்களில் இருந்து சாலை வழியாகவும், கடல் வழியாகவும் அதிக அளவில் கடத்தப்படுவதாக புகார் உள்ளது. இது தொடர்பாக அடிக்கடி போலீசார் பறிமுதல் செய்தாலும், கடத்தல் தொடர்கிறது.

    இந்த நிலையில் நேற்று தேங்காய்பட்டனம் அருகே ராமன்துறை கடற்கரை கிராமம் 5-ம் அன்பியத்தை சேர்ந்த லாரன்ஸ் (வயது 50) என்பவர் வீட்டில் படகுகளுக்கான மானிய விலை மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பதாக கிள்ளியூர் வட்ட வழங்கல் அதிகாரி வேணுகோபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புதுக்கடை போலீஸ் உதவியுடன், தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜ், வருவாய் ஆய்வாளர் சஜித் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 34 கேன்களில் 1,200 லிட்டர் மண்எண்ணை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    உடனடியாக அதிகாரிகள் அதை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். அப்போது அங்கு சென்ற அதே பகுதி 22-ம் அன்பியத்தை சேர்ந்த ஜேசுபாலன் (38) அதிகாரிகளிடம் தகராறு செய்து, மண்எண்ணையை எடுக்கக்கூடாது என தடுத்துள்ளார்.

    மேலும் அரசு ஊழியர்களை தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக புதுக்கடை போலீசில் வட்ட வழங்கல் அலுவலர் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜேசு பாலனை கைது செய்து, மண்எண்ணையை பறிமுதல் செய்தனர். விசார ணையில் மண்எண்ணை அங்கு பதுக்கியது ஜேசு பாலன் என தெரிய வந்தது.

    Next Story
    ×