search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
    X

    ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

    • தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள்
    • பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பு

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பீமநகரி, மாதவாலயம், செண்பகராமன்புதூர், தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தோவாளை ஊராட்சி ஒன்றியம், பீமநகரி ஊராட்சிக்குட்பட்ட அய்யன் கால் ஓடை பகுதியில் ரூ.9.50 மதிப்பில் புதிதாக போடப்பட்ட சாலைப்பணியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, மகாத்மா நகர் பகுதியில் இணையதளம் வழியாக மின்னணுவியல் மின்பொ ருள் கருவி பொருத்தப்பட்டுள்ளதையும், பீமநகரி அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரினை சுத்திகரிக்கும் பொடியினை கலப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட் டது.

    பீமநகரி ஊராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் விளம்பரப்பதாகை அமைக்கப்பட்டிருந்ததையும் பார்வையிடப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வேம்பத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணியினை பார்வையிடப்பட்டது.

    மாதவாலயம் ஊராட்சிக்குட்பட்ட மாதவலாயம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.29 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையலறை, ரூ.9.85 லட்சம் மதிப்பில் நம்பியான்குளம் தூர்வாரும் பணி பார்வையிடப்பட்டது. மேலும், ரூ.4.22 லட்சம் மதிப்பீட்டில் செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் கால்வாய் அருகில் கழிவுநீர் செல்வதற்கான ஓடை அமைக்கும் பணி, 15-வது நிதி மானிய திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார கட்டிட பணியினையும், தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட கீரிப்பாறை பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கீரிப்பாறையிலிருந்து அரசு ரப்பர் கழகம் மற்றும் லேபர் காலனிக்கு செல்வதற்கான பாலப்பணி என மொத்தம் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையம் அருகில் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பூமாலை வணிக வளாகத்தினை சீரமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புனிதம், கனகபாய், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிராங்கிளின் (தடிக்காரன்கோணம்), சஜிதா சுப்பிரமணியம் (பீமநகரி), கல்யாணசுந்தரம் (செண்பகராமன்புதூர்) உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×