search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    X

    நாகராஜா கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    • பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்
    • இன்று ஆவணி 3-வது ஞாயிறு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் நாக தோஷங் கள் நீங்கும், திருமணங்கள் கைக்கூடும் என்பது ஐதீகம்.

    இதனால் ஞாயிற்றுக்கி ழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஆவணி ஞாயிற்றுழமைகளில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி செல்கிறார்கள்.

    ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமை இன்று காலை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப் பட்டது. இதையடுத்து நாகராஜருக்கு சிறப்பு தீபா ராதனையும், அபிஷே கங்களும் நடந்தது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. நாகராஜரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    நாகர் சிலைகளுக்கு பெண்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

    இதனால் நாகராஜா கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. பக்தர்க ளுக்கு நாகராஜா கோவில் கலையரங்கத்தில் அன்னதானம் வழங்கப் பட்டது. கோவிலில் கூட்டம் அலைமோதியதையடுத்து கோவில் நடை சாத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக மதியம் 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி யதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் நாகராஜா திடலில் தங்களது இரு சக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் விட்டு விட்டு கோவிலுக்கு நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாகராஜா கோவில் திடலையொட்டி உள்ள சாலை ஓரங்களில் திரு விழாக்கடைகள் அமைக்கப் பட்டு இருந்தது. கோவிலில் கூட்டம் அலைமோதியதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×