search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    நாகராஜா கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

    • இன்று ஆவணி 3-வது ஞாயிறை முன்னிட்டு வழிபாடு
    • பால் ஊற்றி பெண்கள் வழிபாடு

    நாகர்கோவில், செப். 4-

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்தால் நினைத்தது கைகூடும், திருமணங்கள் நடக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    எனவே ஆவணி ஞாயிற்று க்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் நாகராஜா கோவிலில் அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.இதை தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷே கங்களும், அலங்கார தீபாரா தனைகளும் நடந்தது.

    காலை முதலே கோவி லில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து நாகராஜரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடுவதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி தூவியும் பாலூட்டியும் வழிபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சியளித்தது. கோவில் வளாகத்தை விட்டு நுழைவு வாயில் வெளியே வரை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு வசதியாக கோவில் நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்திருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு கோவில் கலையரங்கத்தில் அன்னதானமும் வழங்க ப்பட்டது. கோவிலுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பாக்கெட் பால்களை கப்புகளில் கொண்டு வந்து நாகர் சிலைகளுக்கு ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர் .கோவிலுக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இதனால் நாகராஜா திடலில் பக்தர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரிசனத்திற்கு சென்றிருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×