என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளச்சலில் பலத்த காற்று வீசுவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
- 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
- இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குளச்சல் :
குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் தென் தமிழக கடல் பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் அதனையொட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தப் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நேற்று ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள், மீண்டும் மீன் பிடிக்க செல்லவில்லை. அவை குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதல் குளச்சல் பகுதியில் மழை பெய்து வருவதால் குறைவான வள்ளம், கட்டுமரங்களே மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. பெரும்பாலான விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று வந்தால் தான் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.