search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நட்டாலத்தில் குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு
    X

    நட்டாலத்தில் குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு

    • மர்ம நபர்கள் வீசி சென்றுள்ள இந்த கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது
    • நட்டாலம் ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரிப்பு

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவசகாயம் பிள்ளை சர்ச் அருகில் அமைந்துள்ளது மதுரை குளம். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில் மூடை மூடையாக மாட்டு இறைச்சி கழிவுகள் காணப்படுகிறது.

    மர்ம நபர்கள் வீசி சென்றுள்ள இந்த கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. தற்போது புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயம் பிள்ளை பிறந்த நட்டா லம் ஆலயம் அருகே இந்த குளம் இருப்பதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார கேடு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்கும் நிலையில் இவ்வாறு மூடை மூடையாக மாட்டு இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் குளத்தில் போட்டு சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    நட்டாலம் ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு இந்த கழிவுகளை பக்கத்து ஊர்களில் இறைச்சி வெட்டு பவர்கள் கொண்டு சென்று போட்டு உள்ளார்களா? இல்லை கேரளாவில் இருந்து கழிவுகளை இங்கே கொண்டு வந்து போட்டு உள்ளார்களா? என்பது பற்றி விசாரித்து வருகிறார்.

    குமரி மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு குளங்கள் பரா மரிப்பின்றி காணப்படுகிறது அதே போன்று தான் இந்த குளத்தையும் பொதுப்பணித் துறையினர் பராமரிக்காமல் போட்டுள்ளனர்.இத னால் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இந்த குளத்தில் வருடத்திற்கு ஒருமுறை மீன் வளர்க் கப்பட்டு குத்தகைக்கு ஏலம் விடப்பட்டு அரசுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கின்றனர். அதில் காட்டும் ஆர்வத்தை போன்று குளத்தை பராமரிப்பதிலும் அதிகாரிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×