search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்க புத்தன் அணை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை
    X

    நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்க புத்தன் அணை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை

    • அதிகாரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசனை
    • நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.251 கோடி மதிப்பீட்டில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் வரை குழாய்கள் அமைத்த நிலையில் நாகர்கோவில் மாநகரில் புதிதாக வீட்டுக்குள்ள இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதே போல் பாதாள சாக்கடை திட்ட பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரும் வகையில் மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பொறியாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரகுபதி, கண்காணிப்பு பொறியளார் மைக்கேல் சேவியர், செந்தூர் பாண்டியன் மற்றும் செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்ட னர்.

    கூட்டத்திற்கு பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நான் அந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டேன். வருகிற மே 31-ந்தேதிக்குள் புத்தன் அணை தண்ணீரை நாகர்கோவில் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் புத்தன் அணை தண்ணீர் நாகர்கோவில் மாநகரில் ஏற்கனவே பொருத்தப் பட்டுள்ள இணைப்புகள் மூலம் வழங்கப்படும். தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் புதிய இணைப்புகள் மூலம் குடிநீரை வழங்கு வதற்காக தலா ரூ.8.30 கோடி மதிப்பீட்டில் இரண்டு பகுதிகளாக மொத்தம் ரூ.16.60 கோடியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒரு சில மாதங்களுக்குள் தற்போது வீட்டு வாசல் அருகே இருக்கும் இணைப்பில் இருந்து முறைப்படி வீட்டுக்குள் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாதள சாக்கடை திட்ட பணிகளை பொறுத்தவரை வலம்புரிவிளை கிடங்கில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கி ஒரு சில மாதங்களுக்குள் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் நாகர்கோவில் மாநகரின் பிரதான இரு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மூலம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×