என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு 'என்ட் டூ என்ட்' பஸ்கள்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பயணிகள் விரைந்து செல்ல வசதியாக என்ட் டூ என்ட் பஸ் இயக்கப் பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு இந்த பஸ்கள் ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் சென்று சேரும்.என்ட் டூ என்ட் பஸ்கள் தினமும் அதிகாலை 3.45 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. 8 குளிர்சாதன பஸ்கள், 12 சாதாரண பஸ்கள் என மொத்தம் 20 பஸ்கள் நெல்லைக்கு இயக்கப்பட்டு வருகிறது.சாதாரண பஸ்களில் கட்டணமாக ரூ.67-ம் குளிர்சா தன பஸ்களில் கட்டணமாக ரூ.82-ம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பஸ்களில் காலை மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். ஒரு பஸ்சில் தினமும் சராசரியாக ரூ.27 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூல் ஆகி வருகிறது. என்ட் டூ என்ட் பஸ்களில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டது. ஒரு சில காரணங்களின் காரணமாக மீண்டும் பஸ்களில் கண்டக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கண்டக்டர் இல்லா மல் பஸ்கள் இயக்கப் படுகிறது. வடசேரி பஸ் நிலை யத்தில் 4 கண்டக்டர்கள் டிக்கெட்டுகள் கொடுப்ப தற்காக நியமனம் செய் யப்பட்டு இருந்தனர். அவர்கள் நெல்லைக்கு புறப்பட்டு செல்லும் பஸ்களில் டிக்கெட்டுகள் வழங்கினார்கள். பயணிகள் அனைவருக்கும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட பிறகு பஸ்கள் இங்கிருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றது.
பஸ்களில் கண்டக்டர்கள் இல்லாததால் பஸ்களை இடையில் நிறுத்தாமல் நேராக நெல்லைக்கு டிரை வர்கள் இயக்கி சென்றனர். காவல்கிணறு பகுதியில் என்ட் டூ என்ட் பஸ்ஸில் ஏறுவதற்காக பயணிகள் காத்து நின்றனர். இன்று பஸ்களை நிறுத்தாமல் நேராக இயக்கப்பட்டதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதே போல் நெல்லை பஸ் நிலையத்திலும் 4 கண்டக்டர்கள் நியமனம் செய்யப் பட்டு டிக்கெட்டு கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை நேரங்களில் பயணி கள் ரூ. 500 நோட்டுடன் டிக்கெட் எடுத்தனர். ஆனால் கண்டக்டர்கள் சில்லறை கொடுக்க முடியாமல் தவிப்பிற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து கண்டக்டர் ஒருவர் கூறுகையில், வழக்க மாக நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு செல் லும் பஸ்ஸில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந் தால் காவல்கிணறு பகுதி யில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வோம். இடையில் பயணிகளை ஏற்றினாலும் ஒரே கட்டணம் தான் வசூல் செய்யப்படும். தற்பொழுது கண்டக்டர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ்களை இடையில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மீண்டும் கண்டக்டர்களை நியமனம் செய்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தார்.
இதற்கிடையில் இன்று கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட்ட பஸ்களில் பயணிகள் குறைவாகவே காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்