என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- தாய்ப்பால் அவசியம் குறித்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் சார்பில் கோட்டார் ஆயுர்வேத கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் விழாவில் கலந்துகொண்டு உலக தாய்ப்பால் வார விழா கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கொழு கொழு குழந்தைகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பரிசு வழங்கினார். கட்டுரை போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
டாக்டர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி இறை பணிக்கு சமமானதாகும். டாக்டர்கள் அன்பாக பேசினால் பாதி நோய் சரியாகிவிடும். துரித உணவு பழக்க வழக்கங்களால் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. எனவே நாம் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தை பசுமை யாகவும், குப்பை இல்லாத மாவட்டமாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பிளாஸ்டிக்கை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய் பால் வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த குழந்தைகள் ஆரோக்கி யமாக வாழும். சரிவர உணவு பழக்கம் இல்லாததால் தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறைந்து வருகிறது. தாய்மார் கள் சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். சமீப காலமாக மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு மன அழுத்தம் தான் காரண மாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து தாய்ப் பால் அவசியம் குறித்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். விழாவில் ஆயுர்வேத மருத் துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டெவி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி குழந்தை மருத்துவம் துறைதலைவர் செந்தி அரசி, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்