search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் அண்ணா சிலைக்கு மாலை
    X

    பிறந்த நாளையொட்டி நாகர்கோவிலில் அண்ணா சிலைக்கு மாலை

    • அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது

    நாகர்கோவில் : அண்ணா பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வடசேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயா கண்ணன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இதைத்தொடர்ந்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மோசமா கியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடங்கி யதில் இருந்து நெய் இருந்தாலும் சரி, எண்ணெய்யாக இருந்தாலும் சரி விலை ஏற்றுவதில் முதல்-அமைச்சருக்கு நிகர் எவரும் கிடையாது.

    ஏழை, எளிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு ஆவின் நெய் விலை ஏற்றப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் மிரட்டி பாலை ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த வகையில் பால் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஆவினை மூடுவதற்கான வழிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக ஏற்கனவே வாங்கிக்கொண்டிருந்த பென்ஷன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் இதுதொடர்பாக தெளிவாக சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ராகவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இணை செயலாளர் சவுமியா, துணை செயலாளர் ரூபா, பொதுக்குழு உறுப்பினர் சகாய டெல்வர், துணை செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×