என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்திற்கு அரசு நிலம் வழங்க வேண்டும்
- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
- மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
நாகர்கோவில்:
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சகாய திலகராஜ், பொருளாளர் சுவாமிதாஸ் ஆகிேயார் சங்கத்தின் சார்பில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில், உங்கள் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் 115 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, குமரி மாவட்டம் வந்தபோது எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட அரசு நிலமும் மானியத்துடன் கூடிய நிதி உதவியும் அளிக்க ஆதரவு தந்தார். இருப்பினும் தற்போது வரை எங்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை. எனவே தாங்கள் அரசு நிலமோ அல்லது அரசு சங்க கட்டிடமோ ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.