search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு
    X

    குமரியில் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பு

    • கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.
    • காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகர்கோவில் :

    உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கல்ல றைத்திருநாள் இன்று (வியாழக் கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

    குமரி மாவட்டத்திலும், இன்று கத்தோலிக்க கிறிஸ்த வர்கள் மற்றும் சி.எஸ்.ஐ. சபை கிறிஸ்தவர்களால் கல்லறைத்திருநாள் அனு சரிக்கப்பட்டது. இதை யொட்டி கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள், முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை களில் வளர்ந்து கிடக்கும் செடி-கொடிகள், புற்கள் போன்றவற்றை அகற்றி, கல்லறைகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். சிலர் கல்லறைகளுக்கு சுண்ணாம்பு தெளித்தும், வர்ணம் பூசும் பணியையும் மேற்கொண்டனர்.

    கல்லறைத்திருநாளான இன்று கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று தங்களுடைய குடும் பத்தினர், உறவினர்கள் மற்றும் முன்னோர்க ளுடைய கல்லறைகளில் மலர் மாலைகள் அணி வித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் பிரார்த்தனை செய்து, அஞ்சலி செலுத்தினர். இதனால் இன்று காலை முதலே கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இன்று மாலை கத்தோ லிக்க ஆலயங்களை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்தி ரிப்பார்கள். இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைத்தோட்டங்களுக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×