search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் விடிய விடிய கொட்டிய கனமழை
    X

    குமரியில் விடிய விடிய கொட்டிய கனமழை

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று மதியத்துக்கு பிறகு பெய்ய தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் விடிய விடிய நீடித்தது.

    நாகர்கோவிலில் இரவு விட்டு விட்டு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை பெய்தது. காலை 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கி யது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, கேப் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிப்போர்விளை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 65.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது.

    கன்னிமார், களியல், மயிலாடி, சுருளோடு, தக்கலை, குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

    திற்பரப்பு அருவி பகுதி யில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவி யில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இரு அணைகளும் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதை யடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து வெளி யேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது. பேச்சிப் பாறை அணையி லிருந்தும் குறை வான அளவு தண்ணீரே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 22.54 அடியாக இருந்தது. அணைக்கு 1109 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 333 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 43.50 அடியாக உள்ளது. அணைக்கு 629 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு 1 அணை நீர்மட்டம் 12.07 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீர்மட்டம் 12.17 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம்பழத்துறை யாறு அணை நீர்மட்டம் 3.94 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.8, பெருஞ்சாணி 30.4, சிற்றார் 1- 24.2, சிற்றார் 2- 26.4, பூதப்பாண்டி 20.2, களியல் 55.2, கன்னிமார் 29.4, கொட்டாரம் 31, குழித்துறை 4.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 28.4, புத்தன்அணை 30, சுருளோடு 34.2, தக்கலை 41, குளச்சல் 32.6, இரணியல் 24, பாலமோர் 37.8, மாம்பழத்துறையாறு 26.8, திற்பரப்பு 52, ஆரல்வாய்மொழி 8.2, அடையாமடை 26.2, குருந்தன்கோடு 31.4, முள்ளங்கினாவிளை 48.2, ஆணைகிடங்கு 27.4, முக்கடல் 18.

    மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக செங்கல் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. தோவாளை, ஆரல் வாய்மொழி, செண்பக ராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.

    மழையின் காரணமாக செங்கல் விலையும் உயர்ந்துள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர் தாலு காவில் மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மணலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மண் சரிவு காரணமாக ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ரெயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×