என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் ஓட்டல் ஊழியர் மர்ம சாவு - போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் முற்றுகை
- கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கன்னியாகுமரி ரத வீதியில் அமைந்து உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார்
- சங்கர பாண்டியன் இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகை
கன்னியாகுமரி :
பணகுடி அருகே உள்ள தண்டையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி (வயது 38).
இவர் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்து கன்னியாகுமரி ரத வீதியில் அமைந்து உள்ள ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலையில் வேலை முடித்துவிட்டு சம்பளம் வாங்கி விட்டு ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு தான் தங்கி இருந்த லாட்ஜுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில்அவர்அந்த லாட்ஜில் தனது வேட்டியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவருடன் வேலை பார்த்து வந்த ஒருவர் இவர் தங்கி இருந்த லாட்ஜுக்கு வந்துள்ளார். அறைக் கதவை வெகு நேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது சங்கரபாண்டி தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றிஅவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரபாண்டியன் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி றார்கள். இதற்கிடையில் சங்கர பாண்டியன் இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் சங்கரபாண்டியன் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.