search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணையின் மேல் பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலியானது எப்படி?
    X

    பேச்சிப்பாறை அணையின் மேல் பகுதியில் கல்லூரி மாணவர் மூழ்கி பலியானது எப்படி?

    • 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர்.
    • ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார்

    கன்னியாகுமரி :

    கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் தும்பமண் பேரா ணிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி ஷாலியா, மகன் ரோஜன்ராஜூ (வயது 19). களியாக்காவிளை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரோஜன்ராஜூ முதலாம் ஆண்டு பிசியோ தெரபி படித்து வருகிறார். ராஜூ இறந்து விட்ட நிலையில் ஷாலியா கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வந்தார்.

    ரோஜன்ராஜூ, புலியூர்சா லையை சேர்ந்த தனது நண்பர் ஆன்றோ என்பவரின் வீட்டில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்கள் 9 பேர் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் பேச்சிப்பாறை அணையை பார்ப்பதற்காக சுற்றுலா வந்தனர். அணையை பார்த்து விட்டு அணையின் மேல் பகுதியான தேக்காடு நீர்பிடிப்பு பகுதிக்கு வந்தனர். அங்கு நண்பர்கள் அனை வரும் சேர்ந்து பிரியாணி சமைத்து சாப்பிட்டு சந்தோஷ மாக இருந்தனர்.

    பின்னர் ரோஜன்ராஜூ உட்பட 4 மாணவர்கள் காய லில் இறங்கி குளித்து நீச்சல டித்து கொண்டு இருந்தனர். அவர்கள் காயலின் ஒரு பகுதி வரை சென்று திரும்பி கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரோஜன்ராஜூ மட்டும் நீச்சல் அடிக்க முடியாமல் தடுமாறினார். அவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அதிர்ச்சி அடைந்த மற்ற 3 மாணவர்களும் சேர்ந்து ரோஜன்ராஜூவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர் தண்ணீர் அதிகம் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து பேச்சிப்பாறை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிட்சை அளித்தனர். இந்த தகவல் அறிந்து திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பீனாகுமாரி சம்பவ இடத்தை பார்வையிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் ரோஜன்ராஜூ குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ரோஜன்ராஜூ இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்டு அவரது நண்பர்கள் கதறி அழுது துடித்தனர்.

    தகவல் அறிந்ததும் பேச்சிப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். மகன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து தாய் ஷாலியாவுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

    இன்று மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாணவன் இறந்த அந்த பகுதியில் அபாய பகுதி யாரும் குளிக்க வேண்டாம் என்று ஊராட்சி மூலம் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×