search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை கூட்டு குடிநீர் திட்ட பைப்புகளை மாற்றி புதிய பைப் லைன் அமைக்கவிட்டால் போராட்டம்
    X

    குழித்துறை கூட்டு குடிநீர் திட்ட பைப்புகளை மாற்றி புதிய பைப் லைன் அமைக்கவிட்டால் போராட்டம்

    • கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்
    • தண்ணீரை பைப் லைன் வழியாக

    நாகர்கோவில் : ராஜாக்கமங்கலத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழித்துறை குடிநீர் திட்டம் கடந்த 18 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் திட்டம் குழித்துறை ஆற்றில் இருந்து தண்ணீரை பைப் லைன் வழியாக கன்னியாகுமரி வரை கொண்டு செல்கிறது. இந்த குடிநீர் திட்ட பைப்புகள் அனைத்தும் சாலையின் நடுவே போடப்பட்டுள்ளது அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பைப்லைன் அனைத்தும் பல இடங்களில் பழுதடைந்து இருக்கிறது.

    குடிநீர் குழாய்கள் அடிக்கடி வெடித்து தண்ணீர் லீக் ஆவதால் அதில் குழிகள் தோண்டப்பட்டு அந்த சாலைகள் முற்றிலும் நாசமாகி வருகிறது. 18 வருடங்களுக்கு முன்னால் சுமார் ரூ.38 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பைப் லைனானது பழுதடைந்து குழித்துறை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மேற்கு கடற்கரை சாலை குண்டும் குழியுமாக பல இடங்களில் காணப்படுகிறது.

    இச்சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4 மாதத்திற்கு முன்னால் ராஜாக்கமங்கலம் துறையில் பள்ளி மாணவி அதில் விழுந்து படுகாயம் அடைந்தவுடன் அதில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    இருப்பினும் அந்த சாலை சீராக செப்பனிடவில்லை. இதனால் குண்டு குழிகளில் விழுந்து 500-க்கும் அதிகமான இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாகி உள்ளனர். அடிக்கடி உயிர்களை பழிவாங்கும் இந்த குடிநீர் குழாய் திட்டத்தை பழுதுகளை செப்பனிடும் பணிக்கே சுமார் ரூ.10 கோடிக்கு மேல் செலவாகி உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து இதே பைப் லைனில் தண்ணீர் அனுப்பினால் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான பேர் இறக்க நேரிடும்.

    எனவே இந்த திட்டத்தை உடனடியாக அரசு சாலையின் அருகில் புதிய பைப் லைன் அமைத்து தண்ணீர் விட கோரி உள்ளார். மேலும் இந்தத் திட்டத்தை உடனே அரசு அறிவித்து பணிகளை தொடங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×