என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய பொதுமக்கள் - அரசு அலுவலகங்களிலும் ஏற்றப்பட்டது
- குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
நாகர்கோவில்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இல்லந்தோறும் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசிய கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசு அலுவலகங்கள் வணிக நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் இன்று தேசிய கொடி ஏற்றினார்.
நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாவட்டத் துணைத் தலைவர் தேவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமவர்ம புரத்தில் உள்ள எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகர்கோவில் நகரில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி இன்று ஏற்றப்பட்டது.
மேலும் நிர்வாகிகளும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி இருந்தனர். அரசு அலுவலகங்களிலும் இன்று தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மீனாட்சிபுரம், வடசேரி, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் முன்பும், கொடியேற்றப்பட்டிருந்தது. ஆட்டோக்கள், கார்களிலும் தேசிய கொடி கட்டப்பட்டி ருந்தது.
அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள், முக்கிய சந்திப்புகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். பொது மக்கள் பலரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி இருந்தனர். ராஜாக்க மங்கலம், தக்கலை, கிள்ளியூர், மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட முக்கியமான இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் இன்று லட்சக்கணக்கான வீடுகளில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி மகாதானபுரத்தில் உள்ள கொடிக் கம்பத்திலும் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்