search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி தொடங்கியது
    X

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி தொடங்கியது

    • பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் சோதனை
    • மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்ப ட்டது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சட்டமன்ற மற்றும் பாராளு மன்ற தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    5,204 மின்னணு எந்திரங்கள், 3,760 கட்டுப்பாட்டு கருவிகள், 2,612 வி.வி. பேட் என மொத்தம் 11 ஆயிரத்து 582 கருவிகள் 3 தளங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திர அறையின் சீலை அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

    இதில் தி.மு.க. சார்பில் வர்கீஸ், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர், கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்ரமணியம், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா உட்பட பலர் கலந்துகொ ண்டனர்.

    அரசியல் கட்சியினர் அங்கு வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்களை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த என்ஜினீயர் குழுவினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இன்று தொடங்கிய சரி பார்க்கும் பணி ஒரு மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×