search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டுவாழ்மடம் சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி தீவிரம்
    X

    ஊட்டுவாழ்மடம் சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி தீவிரம்

    • கரை பகுதிகளில் கான்கிரீட் அமைக்க துரித நடவடிக்கை
    • 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஊட்டு வாழ் மடத்தில் ரெயில்வே கிராசிங்கில் சுரங்கப்பாதை அமைப்ப தற்கு ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்களுக்கு வசதியாக தற்காலிக பாதை அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக தண்டவாளத்தின் கீழ் கர்டர் கருவி பொருத்தப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தின் கீழே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக கடந்த 2 வாரங்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. 8 மீட்டர் அகலத்திற்கு 4 ½ மீட்டர் உயரத்திற்கு 80 அடி நீளத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டதையடுத்து தரையில் காங்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணியை துரிதமாக முடிக்க இரவு பகலாக பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது சுரங்கப்பாதையில் கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கம்பி கட்டும் பணி முடிவடைந்து சுரங்கப்பாதையின் கரை பகுதி காங்கிரீட் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

    சுரங்கப்பாதை பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சுரங்கப்பாதை வரும் பட்சத்தில் அந்த பகுதியை சேர்ந்த பல்வேறு கிராம மக்களுக்கு இந்த சுரங்கப்பாதை பயனுள்ளதாக இருக்கும்.

    ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பொதுமக்கள் வருவதால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டே தற்பொழுது சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கப்பாதை பணி முடிவுக்கு வரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பேருதவியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    Next Story
    ×