search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
    X

    செட்டிகுளத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்

    • வாக்குவாதம் செய்தவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு
    • தகாத வார்த்தையால் பேசியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

    நாகர்கோவில், மே.29-

    குமரி மாவட்டம் முழு வதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகர பகுதி யிலும் போலீசார் அதிரடி வாகன சோதனை மேற் கொண்டு வருகிறார்கள்.

    செட்டிகுளம், வடசேரி, கோட்டார் பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை மேற்கொள்வது டன் போக்குவரத்து விதி களை மீறுபவருக்கு அப ராதம் விதித்து வருகிறார்கள்.

    போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஒருவழிப்பாதையில் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் அபாரதம் விதித்தனர்.

    அப்போது அவருக்கும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தையால் பேசியதுடன் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தார்.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சைமன்நகரை சேர்ந்த டில்லான் (வயது 50) மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×