என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைைமப்பதியில் கலிவேட்டை நாளை நடக்கிறது
- சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணி விடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, அன்ன தானம், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு அய்யா வைகுண்டசாமி சர்ப்ப வாக னத்தில் எழுந்தருளி பதி மற்றும் நான்கு ரத வீதியிலும் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
பக்தர்கள் பூ, பழம், பன்னீர், பால் போன்ற வற்றை சுருளாக வைத்து வழிபட்டனர். 7-ம் நாள் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் எழுந்தருளி வாகன பவனி யும் நடைபெறுகிறது.
8-ம் திருவிழாவான நாளை (வெள்ளிக்கிழமை) கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனையொட்டி மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்ட சாமி வெள்ளை குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து முத்திரிகிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கலிவேட்டையாடும் பணிவிடையை குரு பால ஜனாதிபதி நிகழ்த்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு குரு மார்கள், பாலலோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பள்ளியறை பணிவிடைகளை குருமார்கள் கிருஷ்ணநாம மணி, ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ் ஆகியோர் செய்கின்றனர். தொடர்ந்து பல கிராமங்க ளுக்கு அய்யா வைகுண்ட சாமி குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பா லிக்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக் கோல காட்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவன்று அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் விழாவில் இந்திரா வாகனத்திலும், அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டமும், அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணி விடை, மதியம் உச்சி படிப்பு, இரவு வாகன பவனி, அன்ன தானம், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன், அறக் கட்டளை சார்பில் தலைமை பதி முன்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற் கான ஏற்பாடுகளை அறக் கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்