என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்
- வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று காலை தொடங்கியது
- அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்
கன்னியாகுமரி :
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னி யாகுமரி பகவதி அம்மன்கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன்தொடங்கியது.இந்த திருவிழாநாளைவரை தொடர்ந்து நடக்கிறது.திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்புஅன்னதானமும் மாலை6மணிக்குசமயஉரையும்இரவு7மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9மணிக்கு அம்மன்வாகனத்தில்எழுந்த ருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடந்துவருகிறது.
9-ம்திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதிதெரு, தெற்கு ரதவீதி நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரதவீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர்.
அதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
இதில் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
விஜய்வசந்த் எம்.பி., கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரிஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ், இணை ஆணையர் ஞானசேகர், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பகலியான், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்ஜெஸீம், ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, மலேசிய மக்கள் கட்சி தலைவர் தனேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தேரை பக்தர்கள் மேளதாளங்கள்முழங்க வடம்பிடித்து இழுத்து தெற்கு ரதவீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கீழ ரதவீதியில் கொண்டுவந்து பகல் 12.30 மணிக்கு நிலைக்கு நிறுத்தினர். வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்றுவழிபட்டனர்.
தேரோடும் வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானக்காரம், மற்றும் குளிர்பானங்கள் தானமாகவழங்கப்பட்டன.தேர் நிலைக்கு நின்றதும் பகல்12-30மணிக்கு அன்னதானமும் கஞ்சி தர்மமும்வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுஇருந்தன அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை 2 மணி நேரம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. 10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கி நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும்இரவு7-30மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும்9மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.
10-ம் திருவிழா நாளை (12-ந்தேதி) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.
நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்