search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரத்தில் குப்பையில்லா குமரி நடைபயணம் - அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    X

    குலசேகரத்தில் குப்பையில்லா குமரி நடைபயணம் - அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்

    • குப்பைகளை வெளியே கொட்டாமல் உறிஞ்சி குழாய் மூலம் உரமாக மாற்ற வேண்டும்
    • மக்கும் குப்பைகளை குழாய் வழி உரம் ஆக்குதல் போன்ற வாசகங்களுடன் கூடிய அட்டைகள் ஏந்திச் சென்றனர்.

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் முதல்முறையாக குமரி மாவட்டத்தில் குலசேகரம் பேரூராட்சி சார்பாக கான்வென்ட் சந்திப்பில் இருந்து குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற தலைப்பில் நடை பயணம் தொடங்கப்பட்டது. பேருராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் எட்வின் ஜோஸ், துணைத் தலைவர் ஜோஸ்எட்வர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நடை பயணத்தை தொடங்கி வைத்து நடந்து சென்றார். இந்த நடைபயணம் கான்வென்ட் வழியாக அண்ணாநகர், அரசுமூடு, மணலிவிளை, செருப்பாலூர், இட்டகவேலி, புலியங்கி வழியாக கல்லடி மாமூடு வரை சுமார் 5 கி.மீட்டர் சென்றது.

    இதில் பங்கேற்றவர்கள், வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டாமல் உறிஞ்சி குழாய் மூலம் உரமாக மாற்ற வேண்டும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை அனனவரும் தவிர்க்க வேண்டும், மக்கும் குப்பைகளை குழாய் வழி உரம் ஆக்குதல் போன்ற வாசகங்களுடன் கூடிய அட்டைகள் ஏந்திச் சென்றனர்.

    நிகழ்ச்சியில் பத்மநாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட அரசு வக்கீல் ஜாண்சன், பேருராட்சி தலைவர்கள் பொன் ரவி, அகஸ்டின், பொன்மனை பேருராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, ஊராட்சிமன்ற தலைவர்கள் விமலாசுரேஷ், சலேட் கிறிஸ்டோபர், திருவட்டார் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜ் கவுன்சிலர்கள், பொது மக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×