search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
    X

    குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

    • அ.தி.மு.க.-சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி
    • வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. ராஜாக்கமங்கலம் யூனியன் 10-வது வார்டு, குருந்தன்கோடு யூனியன் 7-வது வார்டுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த யூனியன் அலுவலகங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவ ர்கள் மட்டும் அனுமதி க்கப்பட்டனர். செல்போ ன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராஜாக்கமங்கலம் யூனியன் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அறையின் சீல்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மேஜைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 2 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டது.

    இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா கலையரசு வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அனிதா கலையரசிற்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையிலும் சுயேட்சையாக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.குருந்தன் கோடு யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை, அந்த யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் சுயேட்சை வேட்பாளர் பேபி வெற்றி பெற்றார்.

    மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு க்கான வாக்கு எண்ணிக்கை தக்கலை யூனியன் அலுவல கத்தில் நடந்தது. பதிவான 287 வாக்குகளில் 166 வாக்குகள் பெற்று சுயேட்சை வேட்பாளர் அமுதா ராணி வெற்றி பெற்றார். இதையடுத்து, அமுதா ராணிக்கு தேர்தல் அதிகாரி ராஜா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

    கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டு மற்றும் காட்டாத்துறை ஊராட்சி 5-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை திருவட்டார் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. இதில் கண்ணனூர் ஊராட்சி 4-வது வார்டில் ராஜேஷ் குமார் வெற்றி பெற்றார். காட்டாதுறை 5-வது வார்டு தேர்தலில் பிளஸ்சி வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழை அதிகாரி வழங்கினார்.

    வாக்கு எண்ணிக்கையை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×