என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்
Byமாலை மலர்20 July 2023 12:39 PM IST (Updated: 20 July 2023 3:44 PM IST)
- கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
- கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கனிம பாதுகாப்பு திட்ட தாசில்தார் தினேஷ் சந்திரன் மற்றும் ஊழியர்கள் கொல்லங்கோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு கடத்தல்
ஊரம்பு சந்திப்பில் அவர்கள் நின்ற போது கனிம வளம் ஏற்றிய டாரஸ் லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி தனி தாசில்தார் விசாரித்தார். அனுமதிக்கப்பட்டிருந்த நடைச்சீட்டை வாங்கி பார்த்த போது கொல்லங்கோடு பகுதிக்கு என்று இருந்தது.ஆனால் அதனை மறைத்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக தனி தாசில்தார் தினேஷ் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் விசாரணை நடத்தி லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×