search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர்-கழிப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்
    X

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர்-கழிப்பிட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்

    • அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை
    • 3 இடங்களில் எல்.இ.டி. திரை, கூடுதலாக 3 சி.சி.டி.வி. கேமரா பொருத்திட வேண்டும்.

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவை சிற ப்பாக நடத்தும் வகையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது-

    திருவிழா காலத்தில் போலீசார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு களையும், பக்தர்கள் வருகை காலமான மார்ச் 1-ந் தேதி முதல் கடற்கரையில் பக்தர்கள் நீராடும் இடத்தில் போதிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

    கடைகள் மற்றும் உணவகங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. தேவசம் இணை ஆணையர் ஒத்துழைப்புடன் உரிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 3 இடங்களில் எல்.இ.டி. திரை அமைத்திட வேண்டும். கூடுதலாக 3 சி.சி.டி.வி. கேமரா பொருத்திட வேண்டும்.

    திருவிழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக தேவையான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மண்டைக்காடு அருகே தற்காலிக பஸ் நிலையம், தகவல் மைய அறை, பயணிகள் அமரும் இடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க போதிய டேங்கர் லாரிகள் போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    மின்சார வாரியத்தினர் திருவிழாக் காலங்களில் தங்கு தடையின்றி சமச் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். தற்காலிக கழிவறைகள் அமைத்து அதற்கு தேவையான தண்ணீரை பீப்பாய்களில் வைக்க வேண்டும். கூடுதலாக 20 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் திருவிழா நாட்களில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே அமைத்து 24 மணி நேரமும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

    சுகாதாரத்துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வீதிகளில் குப்பை கள் தேங்காத வண்ணம் சுத்தப்படுத்த வேண்டும். மருத்துவத்துறையினர் கோவில் பகுதியில் ஆம்பு லன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதுடன் முதலுதவிக்கான மருந்து மற்றும் உபகரணங்களுடன் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் செயல்படுவதுடன் குறைந்தது 3 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    குளியலறைகள் மற்றும் கழிவறைகள் சுத்தமாகவும் மக்கள் கூட்டத்திற்கு ஏற்ப போதுமான எண்ணிக்கை யில் அமைக்கப்பட வேண்டும். நடமாடும் கழிப்பிடங்கள் தவறாது அமைக்க வேண்டும்.

    தீயணைப்புத் துறையினர் கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான படகு மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களை பணியமர்த்திட வேண்டும். கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைத்து கூட்டத்தினை ஒழுங்கு படுத்த வேண்டும். பொங்கல் வைக்கும் இடத்தை கண்காணிக்க வேண்டும்.

    மண்டைக்காடு திருவிழா வின் போது தரை வாடகை வசூல் செய்வது தொடர்பாக விதிமுறை மீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×