search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 1500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்
    X

    குமரியில் 1500 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

    • பூஸ்டர் தடுப்பூசி செலுத்த குவிந்த பொதுமக்கள்
    • குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக தினசரி கொரோனாவால் 40 முதல் 50 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிப்பு உள்ள பகுதிகளில் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழு வதும் 742 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 42 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 21,367 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அரவிந்த் முடுக்கி விட்டு உள்ளார்.

    மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங் களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

    மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் கழிந்து விட்டால் உடனடியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையடுத்து இன்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம், வடசேரி ஆரம்ப சுகாதார நிலையம், தெல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு காலையிலேயே பொது மக்கள் வந்திருந்தனர்.

    கூட்டம் குறைவாக இருந்ததால் தடுப்பூசி போடவந்தவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம், வேப்பமூடு பூங்கா பகுதிகளிலும் சுகா தாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். பஸ்களின் உள்ளே சென்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசியை செலுத்தி னார்கள். ெரயில் நிலையங் களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இன்று குவிந்தி ருந்தனர். அதில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காந்தி மண்டபம் காமராஜர் மண்டபம் பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டது.

    தக்கலை, ராஜாக்க மங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், குருந்தன்கோடு, தோவாளை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று தடுப்பூசி போடும் பணி காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 1500 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வரு கிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், பொது மக்கள் வந்திருந்த னர். மதியம் 2 மணி வரை 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இருந்தது.

    Next Story
    ×