என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் புத்தேரி ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி பூஜை
- நாளை இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது
- ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.
பார்வதிபுரம் :
நாகர்கோவில் புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி பீடத்தில் நவராத்திரி பூஜை கடந்த 15-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. தினமும் காலை அபிஷேகம், அலங்கார தீபாராதனை, கூட்டு வழிபாடு, வேள்வி பூஜை, பின்னர் மாலையில் கொலு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. 6-ம் நாளான நாளை (20-ந்தேதி) காலை ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு மகா இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் மூலஸ்தானத்திற்கு சென்று தாங்களே நேரடியாக அபிஷேகம் செய்யலாம். வருகிற 22-ந்தேதி 8-ம் நாளில் துர்கா அஷ்டமி சிறப்பு வழிபாடும், மாலை சக்தி பீடத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். 23-ந்தேதி சரஸ்வதி பூஜை அன்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெறும். 24-ந்தேதி விஜயதசமி தினத்தன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அன்னை பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பழையாற்றுக்கு சென்று ஆராட்டு வைபவம் நிகழ்ச்சியை தொடர்ந்து சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை புத்தேரி ஸ்ரீதேவி துர்கா ஆதிபராசக்தி சக்தி பீடபக்தர்கள் செய்து வருகின்றனர்.