search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகுதியில் 100 கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    கன்னியாகுமரி பகுதியில் 100 கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

    • 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- 3 கடைகளுக்கு அபராதம்
    • 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் சுகாதார அதிகாரி முருகன் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஸ் முன்னிலையில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுதர்சிங், வரி வசூலிப்பாளர்கள் அமல் ராஜ், சரோஜா மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை கன்னியாகுமரி சன்னதி தெரு, கடற்கரை சாலை, காந்தி மண்டப பஜார், மெயின்ரோடு, திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதி உள்பட பல்வேறு இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    இதில் சில கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் கப் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் கூறும்போது, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் தடையை மீறி பிளாஸ்டிக்பொருட்கள் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×