search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குமரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1600 இடங்களில் மட்டுேம சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி - போலீசார் தீவிர கண்காணிப்பு
    X

    குமரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1600 இடங்களில் மட்டுேம சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி - போலீசார் தீவிர கண்காணிப்பு

    • சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயாராகி வருகிறார்கள்
    • ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்

    நாகர்கோவில்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றா கும். விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து இந்து முன்னணி இந்து மகா சபா பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயா ராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டா டப்படாத நிலையில் இந்த ஆண்டு மிக உற்சாகமாகக் கொண்டாட இந்து அமைப்பினர் தயாராகி வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தயாராகி வருகிறார்கள்.

    ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீ சார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் 1600 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த ஆண்டும் அதே இடங்களில் மட்டுமே சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களை தவிர்த்து வீடுகளிலும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். கோவி ல்களிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படு கிறது.

    ஒரு சில இடங்களில் இன்று மாலை சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ள னர். பல்வேறு இடங்களில் நாளை அதிகாலையில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. பிரதிஷ்டை செய் யப்படும் விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    போலீசார் இது தொடர் பாக தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் விநாயகர் சிலை ஊர்வ லத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளுக்கு அனை வரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண் டுள்ளனர்.

    விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 2 ஆயிரம் போலீ சார் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×