என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நினைவு நாளையொட்டி தி.மு.க.வினர் அமைதி பேரணி
- அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் பங்கேற்பு
- ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில்:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைதி பேரணி இன்று நடந்தது.
வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து நடந்த அமைதி பேரணிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். வடசேரியில் இருந்து புறப்பட்ட பேரணி மணிமேடை வழியாக வேப்பமூடு வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.
அமைதிப் பேரணியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர். எஸ். பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர்கள் தாமரை பாரதி, மதியழகன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுரேந்திர குமார், வர்த்தக அணி அமைப்பாளர் சி.என். செல்வன், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என். சங்கர், தொண்டரணி அமைப்பாளர் எம்.ஜே. ராஜன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் கருணா நிதியின் படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கு நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்