என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இன்று பட்டா கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி
- பஸ் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
- ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்து உள்ளனர். மேலும் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அருந்த தியர் தெருவை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை பற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த னர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருவில் இருந்து பேரணியாக சாலையை நோக்கி வந்தனர். அவர்கள் சாலையோரம் நின்ற படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
திடீரென ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் செய்ய அனுமதி இல்லை என கூறினர்.
ஆனாலும் மக்கள் போலீசாரின் பேச்சை பொருட்ப டுத்தாமல் தொடர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஷ், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமர், திருமுருகன், அருண் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை.
அப்போது மறியிலில் ஈடுபட்ட 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மண் எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து கேனை பிடுங்கினர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றி னர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனைதொடர்நது மறியிலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். மேலும் மறியல் செய்த ஆண்களை ஒரு மினிபஸ்சில் ஏற்றினர்.
அப்போது மினிபஸ்சில் மறியல்காரர்கள் ஏற மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்ட ஆண்களுக்கும் இடையே தகராறுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மறியல்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினி பஸ் மீதும், போலீசார் மீதும் வீசத் தொடங்கினர். இதில் மினிபஸ்சின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் கல் வீச்சில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ்காரர் ஜோஸ் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலை கட்டுக் கடங்காமல் சென்றதால், மறியல்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மறியலில் ஈடுபட்ட ஆண்கள் நாலாபுற மும் சிதறி ஓட தொடங்கினர்.
போலீசாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனர். இதில் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீ சாரின் தடியடியால் கிருஷ்ணன்கோவில் சாலை பகுதி போர்களமாக கட்சி அளித்தது.
இதனைதொடர்ந்து தப்பி ஓடிய மறியல்காரர்களை போலீசாா் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்