என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி
- கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை
- குழந்தையை யாரும் கொண்டுவந்து போட்டுச் செல்வது போன்ற பதிவுகள் எதுவும் இல்லை
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே சாலையோரம் உள்ள கோவிலின் முன்பு பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த அந்த குழந்தையை பார்த்தவர்கள் பதறி நிற்க, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
பிறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு நடத்தினர்.
இதில் பெண் ஒருவர் கோவில் அமைந்துள்ள பகுதியில் சுற்றி வருவது பதிவாகி உள்ளது. ஆனால் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. அவர், அந்த பகுதியில் தரையில் கிடந்த நாவல் பழங்களை எடுப்பதும் பின்னர் கோவிலை நோக்கி சென்று திரும்புவதுமாக காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 வாலிபர்களும் காமிரா பதிவில் சிக்கி உள்ளனர். இருப்பினும் குழந்தையை யாரும் கொண்டுவந்து போட்டுச் செல்வது போன்ற பதிவுகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் போலீசாரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
எனவே வேறு ஏதும் கண்காணிப்பு கேமராவில் பெண்ணின் உருவம் முழுமையாக பதிவாகி இருக்கலாமா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பெற்ற குழந்தையை கல் மனதுடன் வீசி சென்ற தாய் யாரென்று தெரியாத நிலையில், அந்த குழந்தையை தத்தெடுக்க பலரும் போட்டா போட்டியில் ஈடு பட்டு வருகின்றனர். இதற் கான முயற்சியில் பலரும் ஈடு பட்டுள்ளதாக கூறப்படு கிறது. அரசு விதிமுறைகளை கடைபிடித்து குழந்தையை தத்தெடுப்பது எப்படி? என பலரும் ஆலோசித்து வருகின்றனர்.