search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் மாதிரி வரைபடம் தயாரிப்பு
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரத்தின் மாதிரி வரைபடம் தயாரிப்பு

    • சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.
    • இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கி றார்கள். பழமை வாய்ந்த இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    அஸ்திவாரத்தோடு நின்றுபோன இந்த ராஜகோ புரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவ பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த 17-ந்தேதி நடந்தது. அப்போது பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்ட உத்தரவு கிடைத்தது. அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண் டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள 24-வது சக்தி பீடமான பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபி ஷேகம் நடத்தி விட்டு ராஜகோபுரம் கட்டும் பணி யை தொடங்க வேண்டும் என்றும், சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கும் என்பதும் தேவ பிரசன்னத்தில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற் காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை (22-ந்தேதி) கணபதி ஹோமம் நடக்கிறது. இதற்கிடையில் பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்திலும், 66 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் கட்டப்பட உள்ளது. இந்த ராஜகோ புரத்தின் மாதிரி வரை படத்தை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் வழங்கினார்.

    Next Story
    ×