என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் மழை நீடிப்பு
- 3 அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
- 2000 குளங்கள் நிரம்பி வழிகிறது
நாகர்கோவில், நவ.14-
குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவில், முள்ளங்கினாவிளை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. கன மழை குறைந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் பேச்சிப் பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி யில் ஆனந்த குளியலிட்டனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.80 அடியாக உள்ளது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது.
அணைக்கு 361 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.51 அடியாக உள்ளது.
அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே நடவு பணி நடைபெற்ற நிலையில் பூதப்பாண்டி, அருமநல்லூர், சுசீந்திரத்தின் ஒரு சில பகுதிகளில் நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கு தேவை யான உரங்களை தங்குதடை யின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயி களுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்