என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
- சானல்கள் சீரமைப்பு பணி தீவிரம்
- அணைகளின் நீர்மட்டம் சரிவு
நாகர்கோவில், ஜூன்.22-
குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 2 வார காலங்கள் ஆன பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இதனால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். உடனே சானல்களை தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து சானல்களை தூர்வார ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சானல்கள் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. கிளை கால்வாயில் தற்பொழுது தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. பிரதான சானல்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ளும் போது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டு சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 716 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், நாஞ்சில்நாடு புத்தனாறு சானல், அனந்தனார் சானல்களில் விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.97 அடியாக இருந்தது.
362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 716 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.25 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கோடை மழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.