என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழித்துறையில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
Byமாலை மலர்12 July 2022 12:37 PM IST
- 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது.
- இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி:
குழித்துறை சந்திப்பிலிருந்து குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு -தாலுகா அலுவலகம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படுகின்ற 97-வது வாவுபலி பொருட்காட்சி நாளை (13-ஆம் தேதி) தொடங்கி 20 நாட்கள் நடைபெற உள்ளது. அப்போது அப்பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சென்றுவர கடும் அவதிக்குள்ளாக நேரிடும். எனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×