search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் 8-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ. 50 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி
    X

    நாகர்கோவில் 8-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ரூ. 50 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நாகர்கோவில் மாநகராட்சியை இந்தியாவிலேயே முதல் நிலை மாநகராட்சியாக மாற்றுவதற்கு முயற்சி என அறிவிப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் 8-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளி விளை மேலத்தெருகரை பகுதியில் சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் பழுதான சாலைகள் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் 274 சாலைகளை சீரமைக்க ரூ.68½ கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நிதி கிடைக்கப் பெற்றதும் அந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். நாகர்கோவில் மாநகராட்சியை இந்தியாவிலேயே முதல் நிலை மாநகராட்சியாக மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். நிகழ்ச்சியில் என்ஜினியர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சேகர் ,வட்டச் செயலாளர் சங்கர், ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×