என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
- கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்
- எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சில வாகனங்கள் சிக்கி உள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளுக்கும் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது