என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாகர் கவாச் ஒத்திகை கன்னியாகுமரி கடல் வழியாக மாறுவேடத்தில் வந்த 9 பேர் சிக்கினர்
- இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர்
- விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.
நாகர்கோவில் :
கடல் வழியாக தீவிரவாதி கள் மும்பையில் தாக்குதல் நடத்தியதையடுத்து கட லோர பாதுகாப்பு குழும போலீசார் கடல்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப் போது சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் நாளை மாலை 7 மணி வரை "சாகர் கவாச்" என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று காலை சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். கட லோர காவல்படை இன்ஸ் பெக்டர் நவீன் தலைமை யிலான போலீசார் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து 8 நாட்டிங்கல் தொலைவில் ரோந்து பணி சென்றபோது சந்தேகப் படும்படியாக படகு ஒன்று நடுக்கடலில் நின்று கொண் டிருந்தது. போலீசார் அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது படகில் இருந்தவர்கள் மீனவர்கள் என்று தெரிவித்தனர்.
உடனே கடலோர பாது காப்பு குழும போலீசார் அவர்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் மீனவர் களுக்கான அடையாள அட்டை எதுவும் இல்லை. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் மாறுவேடத்தில் வந்த கமாண்டோ படை போலீசார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 8 போலீசாரையும், ஒரு கப்பல் படை வீரரையும் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 8 பேரையும் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டு வருகிறார் கள். குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதிகளில் கட லோர காவல் படை போலீ சார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு உள்ளனர்.