search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கையாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - கலெக்டர் அரவிந்த் தகவல்
    X

    வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கையாக மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் - கலெக்டர் அரவிந்த் தகவல்

    • கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகள்
    • பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மேற் கொள்ள வேண்டிய முன் னெச்சரிக்கை நடவ டிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிரெய்லி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் தேவையான தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், பெருவெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படக் கூடிய சானல் மற்றும் குளக்க ரைகளை சீரமைக் கும் பணி களை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    கடலோரப் பகுதிகளில் மற்றும் வெள்ள அபாய பகுதிகளில் பாதிக்கப்படும் நபர்களை மீட்க தேவையான மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைக்க மீன்வளத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தெரிவிக்கப் பட்டது. மேலும் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தாக நெடுஞ்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நிற்கும் மரங்களை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் அகற்றப்பட்டதை உறுதி செய்ய அனைத்து வட்டாட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பருவமழை காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜேசிபி. மின்மோட்டார் போன்றவற்றை போதுமான அளவில் தயார்நிலையில் வைக்கவும், தற்காலிக தங்கும் முகாம்களை உடனடியாக பார்வையிட்டு அவற்றின் போதிய அடிப் படை வசதிகள் உள்ள னவா என்பதை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

    பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆறு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை மேற்படி பகுதிகளுக்கு அழைத்துச்செல்லாமல் தற்காத்துக்கொள்ளவும், தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மனாபபுரம் சப்-கலெக் டர் அலர்மேல்மங்கை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×