என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகள் தொடக்கம்
- நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு விநியோகம்
- அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.
சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் இணைந்து சுகாதார பணியாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது இன்று 2-வது நாளாகவும் நீடித்தது. இன்று காலை வரை 900 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலமாகவும் கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் வாரியாகவும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. தனி வார்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை சிகிச்சைக்காக சேர்த்து வருகிறார்கள். ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும் அந்த வார்டுக்கு மாற்றி டாக்டர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்