search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோட்டியோடு சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் - வில்லுக்குறி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    X

    தோட்டியோடு சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் - வில்லுக்குறி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • குடிநீர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டுவது.
    • மழைநீர் ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகள் தோறும் 100 சதம் உறுஞ்சு கிணறு அமைக்க வலியுறுத்துவது

    கன்னியாகுமரி :

    வில்லுக்குறி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் லவுலின் மேபா, துணைத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வில்லுகுறி பேரூராட்சியில் உள்ள மழைநீர் ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகள் தோறும் 100 சதம் உறுஞ்சு கிணறு அமைக்க வலியுறுத்துவது. நபார்டு வங்கி நிதி உதவியில் விவசாயிகள் விளைபொருளை சந்தைப்படுத்த வசதியாக தோட்டியோடு நங்கணை கால்வாயில் இருந்து அக்கினியாகுளம் வரை உள்ள மண்சாலையை தடுப்பு சுவர் அமைத்து தார்சாலை அமைக்க இருக்கும் பணி, மேலப்பள்ளம் தூவலாறின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்வது.

    மாம்பழத்துறையாறு அணை தண்ணீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டுவது. திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கவுன்சிலர்கள் சரிதா, சுதா, புஷ்பாகரன், எட்வர்ட்திலக், ஆன்சிலாவிஜிலியஸ், ஜோஸ்பின்புனிதா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

    Next Story
    ×