search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1750 வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஐ.டி - தனியார் பணிக்கான சிறப்பு பயிற்சி
    X

    1750 வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஐ.டி - தனியார் பணிக்கான சிறப்பு பயிற்சி

    • குமரி மாவட்டத்தில் நாளை தொடங்குகிறது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான இளை ஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கி ன்றனர். தமிழகத்தில் பல தனியார் நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்பு கள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் திறன் படைத்த தகுதியான பணியாளர்களைத் தேடி வருகின்றனர்.

    இந்த இடைவெளிக்கு காரணம், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நவீன தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்கள் இளைஞர்களிடம் குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வேலை யில்லா பட்டதாரிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் போன்றோ ருக்கு தொழில்நுட்பத்திறன் மற்றும் மென்திறன்களை நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரம் உயர்த்திப் பயிற்சியளித்து தனியார் நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணியில் அமர்த்திட தமிழக அரசு திட்டம் தீட்டியுள்ளது.

    தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் உள்ள ஐ.சி.டி அகெடமி முதற்கட்டமாக, குமரி மாவட்டத்தில் 1750 பேருக்கு பயிற்சி அளிக்க உள்ளது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பயிற்சி திட்டம் நாளை (6-ம் தேதி) சுங்கான்கடை செயின்ட் சேவியர்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்க இருக்கிறது.

    இந்த திட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு. மார்கெட்டிங். நிதித்துறை, உற்பத்தி பிரிவு உட்பட்ட பல தர பணிகளுக்கும் அவரவர் கல்விப்பின்னணி மற்றும் துறை ஆர்வத்திற்கேற்ப 45 நாட்கள் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

    இதில் தொழில்நுட்ப திறன் மற்றும் தனிநபர் மென்திறன்கள் மேம்பா ட்டிற்கான பயிற்சி வழங்க ப்படும். பயிற்சிக்கு பின், அந்தந்த துறை சார்ந்த நிறுவனங்களில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வேலை கிடைப்பதற்கான முழு வழி காட்டலும் வழங்கப்படும். முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சி யில் சேர 2018-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுடையோர். நாளை கங்கான்கடை செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×