search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொற்றையடி ஸ்ரீ ஷீரடி சாயி பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
    X

    பொற்றையடி ஸ்ரீ ஷீரடி சாயி பாபா ஆனந்த ஆலயம்

    பொற்றையடி ஸ்ரீ ஷீரடி சாயி பாபா ஆனந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

    • ஸ்ரீ ஷீரடி சாயி பாபா மகா சமாதி ஆனது வரும் சனிக்கிழமையோடு 104 வருடங்கள் ஆகிறது.
    • சனிக்கிழமை சரியாக 12 மணிக்கு தெய்வீக ஒளி தரிசனம் 3 நமிடங்கள் மட்டுமே நடைபெறும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பொற்றை யடியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாயி பாபா ஆனந்த ஆலயத்தில் இந்திரலோக பிரகாசமும், பாபாவின் திவ்ய அதிர்வுகளும் நிகழ்வு வரும் (15.10.2022) சனிக்கிழமை நடைபெறுகிறது. ஸ்ரீ ஷீரடி சாயி பாபா மகா சமாதி ஆனது வரும் சனிக்கிழமையோடு 104 வருடங்கள் ஆகிறது. அன்று உலகில் வேறு எந்த பாபா கோவிலில் இல்லாத அதிசயமாக பொற்றையடி ஆனந்த ஆலயத்தில் பாபாவின் முன் அமைக்க பெற்றிருக்கும் சூரிய காந்த கல்லால் ஆன பாதங்களில் ஒளி ரூபத்தில் காட்சி தருகிறார். இது ஒரு மிக பெரிய நிகழ்வாகும்.

    இதனால் ஏற்படும் இந்திரலோக பிரகாசமும் திவ்ய அதிர்வுகளும் வாழ்வின் சிக்கல்களை நீக்கி அமைதியையும், ஆனந்தத்தையும் தரக்கூடிய வல்லமையை பெற்று தரும்.

    இவ்வாலயத்தில் வரும் (15.10.2022) சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆனந்த சாய் பஜன்ஸ் பாபாவின் கான மழையும், காலை 11.30 மணிக்கு கூட்டு பிரார்த்தனையும், காலை 11.50 மணிக்கு தியானமும், அதனை தொடர்ந்து நண்பகல் சரியாக 12 மணிக்கு தெய்வீக ஒளி தரிசனம் 3 நமிடங்கள் மட்டுமே நடைபெறும். அதனை தொடர்ந்து 12.15 மணிக்கு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாயி சேரிட்டபுள் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாயி சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×